பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடீன் கொலை வழக்குடன் தொடர்புடையவர்கள் தராதரம் பாராது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென கொழும்பு மேலதிக நீதவான் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளனார்.
கொலை வழக்குத் தொடர்பில் அலரி மாளிகை, கார்ல்டன் இல்லம் ஆகியனவற்றுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்கள் வெளியாகினால் தராதரம் பாராது சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சட்டத்தின் முன்னிலையில் எவரும் விசேட நபர்கள் கிடையாது, அனைவருக்கும் சட்டம் சமமானதேயாகும்.
எனவே விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என புலனாய்வுப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.