உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் சுயலாபத்துக்காகவே பயன்படுத்தப்பட்டது : சஜித்

308 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இந்த அரசாங்கம், தனது அரசியல் சுயலாபத் துக்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த நாடகத்துக்கு மக்கள் ஏமாற்றமடையக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போதைய அரசாங்கம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சஜித் மேலும் கூறுகையில்,

“பொதுத் தேதர்தல் காலத்தின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அதிகளவாகப் பேசப்பட்டது. இதுதொடர்பாகப் பல்வேறு நாடகங்களும் அன்று அரங்கேற்றப்பட்டன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்ட வர்களுக்கு இந்த அரசாங்கம் வழங்கப்போகும் தண்டனை என்ன? எம்மைப் பொறுத்தவரை அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்.

பொதுத் தேர்தல் காலத்தில், இந்த விவகாரத்தைஅரசாங்கம் அரசியல் லாபத்திற்காகத் தான் பயன்படுத்தியது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரை இந்த அரசாங்கம் கைது செய்தது. ஆனால், இன்று அவருக்கு எதிராக எந்தவொரு சாட்சியும் இல்லாத காரணத்தால் அவரை விடுதலை செய்தது. அப்படியானால், பொதுத்தேதர்தல் காலத்தின்போது கூறிய கதைகளுக்கு என்ன ஆனது?

இவை அனைத்தும் மக்களை முட்டாளாக்க அரசாங்கம் மேற்கொண்ட செயற் பாடாகவே நாம் கருதுகிறோம்.இதிலிருந்தே அரசாங்கம் அரசியல் லாபத்துக் காகத்தான் இந்த விடயத்தைப் பயன்படுத்தியது என்பது உறுதியாகியுள்ளது.

இன்று ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்’ தொடர்பாகக் கவனம் செலுத்தாமல், ஜனநாயகத்தை அழிக்கும்20 ஐ கொண்டுவரவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இது அரசியல் கண்ணாமூச்சி நாடகமாகும்.இதற்கு மக்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏமாந்துவிடக் கூடாது” என்றார்.