வவுனியாவில் தீ பரவல் – வீடுகளுக்கு பரவ விடாமல் விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படை!

324 0

வவுனியா – நவகம பகுதியில்  ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்படுத்தி அயலில் இருந்த வீடுகளுக்கு  தீ செல்ல விடாது வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தடுத்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வவுனியா – நவகமவில் வயல் பகுதியில்  தீ பரவியுள்ளது. இத் தீயானது தண்டாவாளம் வரை தீப்பிடித்திருந்தது. வடக்கு பகுதிக்கான தண்டவாளங்களுக்கு அருகேயுள்ள பாலங்களை சீர்செய்து வருகின்றனர். நவகம பாலம் வேலை செய்வதற்காக பாலத்திற்கு அருகே வைத்திருந்த மரங்களும் தீக்கிரையாகியிருந்தன.

அருகில் இருந்த மக்கள் குடிமனைக்குள் பரவாதவாறு அதனை கட்டுப்படுத்தும்  நிலையில் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா தீயணைப்பு பிரிவினர் மக்கள் குடிமனைக்குள் அத்தீயானது பரவலடையாது தடுத்ததுடன், வயல் பகுதியில் ஏற்பட்ட தீ பரம்பலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இவ் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.