உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பிரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுகிறது.
அவ்வகையில் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று பிற்பகல் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.
நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. 7ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 8ம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் 12ம் தேதி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.