மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்ததற்காக கைதுசெய்தால் சிறை செல்லவும் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
எந்த விலை கொடுத்தும், தமிழ்த் தேசத்தினதும் – தமிழ் மக்களினதும் விடுதலையைப் பெறுவதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
7 ஆண்டுகளின் பின்னர், தமிழர் தாயக தேசத்தில், மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினம் நினைவுகூரப்பட்டது.
மாவீரர் தினத்தில் பங்கெடுத்த அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில், கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா, தீவிரவாத சக்திகளும் அவர்களுடைய தலைவர்களும் வழமைபோல இப்போதும் கூக்குரல் எழுப்பியிருக்கின்றார்கள்.
அவர்களுடைய சொல்லுக்கு இந்த நல்லாட்சி இடமளிக்காது என்று நாங்கள் நம்புகின்றோம் என குறிப்பிட்டார்.