மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதைத் தடுக்க இனவாதிகள் முயற்சி – கிழக்கு முதலமைச்சர்

292 0

150205162505_hon_za_nazeer_ahamed_sri_lanka_slmc_eastern_provincial_council_640x360_bbcமாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிறுபான்மை மக்களுக்கான வடக்கும் கிழக்கும் மாத்திரம் நன்மை பெறப்போவதில்லை.

பெரும்பான்மையினர் வசிக்கும் ஏனைய ஏழு மாகாணங்களும் இதன் மூலம் பாரிய நன்மையை பெறப்போகின்றன என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்பு தொடர்பான செயலாளர் டமியனோ அஞ்சலோ ஸ்குஅய்டாமெட்டி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திருகோணமலையில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.