இலங்கையில் மாகாணங்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கல் அவசியம் என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் பகிரப்படும் யோசனைக்கு தமது கட்சி இணங்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பில் பிளவுப்படாத நாடு என்ற அம்சம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதன் அடிப்படையில் பிரிக்கப்படாத நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரங்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.