உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கொண்டு வருவது கட்டாயம் என்ற போதிலும் இரு மாகாணங்களையும் இணைத்து அந்த தீர்வை கொண்டு வருவது குறித்து இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கையும் கிழக்கையும் இணைத்து அரசியல் தீர்வு ஒன்றை கொண்டு வருவது குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த வருட இறுதிக்கு முன்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை கொண்டு வர முடியும் என நம்புகிறேன் எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.