யாழ்.மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு, எழுவதீவு மற்றும் அனலதீவு போன்ற பகுதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று விஜயம் செய்தார்.
அங்கு சென்ற அவர் பாடசாலைகள், வைத்திய சாலைகள் என்பவற்றிற்கு சென்று அங்குள்ள குறை நிறைகள் தொடர்பாக ஆராய்ந்தார். அதன் பின்னர் பாடசாலைக மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் அவர் வழங்கி வைத்தார்.
குறிப்பாக நெடுந்தீவில் உள்ள 850 மாணவர்களுக்கு அவர் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். அத்துடன் தீவகங்களில் உள்ள மந்தமான கல்வி நிலைகளை மாற்றுவதற்கு மாலை நேர வகுப்புக்களை அரசாங்க செலவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் கல்வித் திணைக்களத்தின் ஊடாக செய்து கொடுத்திருந்தார்.