யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் இருளில் வெளிச்சம் தரும் ஸ்ரிக்கர்கள் துவிச்சக்கரவண்டிகளில் ஒட்டப்பட்டன.
கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுச் சந்தியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இச்செயற்றிட்டத்தில் வெளிச்சக்கற்கள் பொருத்தப்படாத 200 துவிச்சக்கரவண்டிகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றின் முன்புறத்திலும் பின்புறத்திலும் இருளில் வெளிச்சம் தரக்கூடிய ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
துவிச்சக்கரவண்டிகளில் வெளிச்சக்கற்கள் பொருத்தப்படாமல் இருப்பதானால் இரவு நேரங்களில் அதிகமான விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இரவு நேரங்களில் துவிச்சக்கரவண்டிகளால் ஏற்படுகின்ற விபத்துக்களைக்குறைப்பதற்காக துவிச்சக்கரவண்டிகளின் முன்புற மற்றும் பின்புற பகுதிகளில் இருளில் வெளிச்சம் தரக்கூடிய ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி காந்தவல தெரிவித்துள்ளார்