வீதி ஒழுங்கு மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, விபத்துகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துக்குள் பிரிவின் பயிற்சியளிப்பு அதிகாரி புஸ்பா ரம்யானி சொய்ஸா இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அபராதம் அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் அதிக அளவானவர்கள் விபத்துகளால் வைத்தியசாலையில் அனுமதி பெற்றனர்.
ஆனால் தற்போது விபத்துகளால் அனுமதி பெறுகின்றவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.