கற்பிட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து 25 கிலோகிராம் கஞ்சா மீட்கபட்டுள்ளது.
புத்தளம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடை சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.