ஆவாக் குழு சந்தேக நபர்களுக்கு பிணை

316 0

bailவடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் ஆவாக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைதாகி இருந்த 11 பேருக்கு கடும் நிபந்தனைகளுடனான பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்ப மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது.

அத்துடன் அவர்கள் வெளி நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் கைச்சாத்திடுமாறும் அவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த 11 பேர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அண்மைய வாரங்களில் கைதாகி இருந்தனர்.

அதேநேரம் ஆவாக் குழுவில் 62 பேர் இருப்பதாகவும், அவர்களில் 38 பேர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் வைத்து கூறி இருந்தார்.

மேலும் இந்த குழுவின் தலைவர் என்று கருதப்படும் குமரேஸ்வர் விநோதன் எனப்படும் ஆவாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.