அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நால்வர் ஒரே தினத்தில் உயிரிழப்பு

301 0

tamildailynews_6044079065323கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளான நான்கு நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பில் 24 மணி நேரத்துக்குள் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த தினம் கொழும்பு வைத்தியசாலையில் ஆறு பேருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் நான்கு பேர் திடீர் நடுக்கத்தினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையின் போது வழங்கப்படுகின்ற இரசாயன திரவியம் ஒன்று உரிய தரத்தைக் கொண்டிராமையே இதற்கான காரணம் என்று குற்றம் சுத்தப்படுகிறது.

இந்த நிலையிலேயே இது தொடர்பில் உடனடி அறிக்கையை முன்வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.