பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப் புகை தாக்குதல் (காணொளி)

370 0

uniஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்தாரைத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்ல பொல்தூவ பாலமருகே தங்களின் பேரணியை கலைக்க பொலிஸார் முயன்ற சந்தர்ப்பத்தில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வரவு செலவு திட்டம் மற்றும் சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே நேற்று இந்த பேரணியை ஏற்பாடு செய்ததாக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில்  காயமடைந்த 6 பேரில் 3 பேர் தேசிய வைத்தியசாலையிலும் ஏனையவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லஹிரு வீரசேகர கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களில் இருவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளமையினால் அவர்கள் சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.