உடுதும்பர நிஷாருவ பிரதேசத்தில் போலியான நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுதும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 39 ஐந்தாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் மற்றும் அச்சிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரம் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
39 வயதுடைய உடுதும்பர பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.