வெளிவிவகார அமைச்சில் ஊழல் – நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்க கோரிக்கை

289 0

sunil-handunneththi-jvp-mpவெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பூரண அதிகாரங்களுடன் விசேட நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்துக்கான பாதீட்டின், வெளிவிவகார, விவசாய மற்றும் தொழிற்சங்க அமைச்சுக்களினதும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினதும் ஒழுக்கங்கள் தொடர்பான குழு நிலை விவாதம் இன்று நடைபெறுகிறது.

இதன்போது வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் குறுக்கிட்ட சுனில் ஹந்துநெத்தி, இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த குழு 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தாம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், யாரேனும் யோசனையை முன்வைத்தால் அதனை ஏற்றுக் கொண்டு செயற்படுவதாகவும் கூறினார்.