புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து இன்று வரை நாள் ஒன்றுக்கு ஏழு ஏக்கர் காடுகள் அழிப்பு

281 0

புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து இன்று வரை நாள் ஒன்றுக்கு ஏழு ஏக்கர் காடுகள் அழிக்கப்படுவதைச் சுற்றுச்சூழல் அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

இந்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க அனை த்து குடிமக்களும் ஒன்றுபட வேண்டும் என அவர் தெரி வித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்த ‘சுற்றுச்சூழல் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது துணைத் தலைவர் இத னைத் தெரிவித்தார்.

உலக பாரம்பரிய சிங்கராஜா காடு மற்றும் சுற்றுச்சூழல் அழிவு தொடர்பான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை முழு நாடும் அவதானித்தது என்றும் சுற்றுச்சூழல் அழிவு இப்போது நாட்டில் ஒரு பெரிய தலைப் பாகிவிட்டது என அவர் தெரிவித்தார்.