20வது திருத்தத்தினால் நாடு பேரழிவை சந்திக்கலாம் ஜனநாயக விழுமியங்கள் அழிக்கப்படும் – கரு

416 0

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக 20வது திருத்தத்தினை எதிர்க்கப்போவதாக நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நீதியானசமூகத்துக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர்கருஜெயசூரிய உட்பட பல நாடாளுமன்றஉறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.


கலந்துரையாடல்களை மேற்கொள்வது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ அல்லது தற்போதைய அரசாங்கத்தை விமர்சனம் செய்வதற்கோயில்லை என முன்னாள் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
உத்தேச திருத்தங்கள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கின்றன என தெரிவித்துள்ள கருஜெயசூரிய இதன்காரணமாக இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு எதிர்கட்சியினருக்கும் நாட்டு மக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.


20வது திருத்தம் நாட்டைபேரழிவை நோக்கி தள்ளும் என தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் 20வது திருத்தம் ஜனநாயக கொள்கைகளை அழித்துவிடும் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியோ பிரதமரோ அரசாங்கமோ இந்த நோக்கத்துடன் 20வது திருத்த்தினை கொண்டுவந்துள்ளதாக நான் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.