முதல்முறையாக இணைய வழி மூலமாக ஜி-20 மாநாடு

508 0

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சர்வதேச நிதி ஆதாரங்களின் நிலை குறித்து ஆலோசிக்கும் ஜி-20 மாநாடு, முதல்முறையாக இணைய வழி மூலமாக நடைபெறவுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான ஜி-20 மாநாடு, எதிர்வரும் நவம்பர் 21ஆம் மற்றும் 22ஆம் ஆகிய திகதிகளில் மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஜி-20 மாநாட்டை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமையை, சவுதி அரேபியா பெற்றுள்ளது.

உலகின் வளர்ச்சி அடைந்த, 20 நாடுகளை உள்ளடக்கிய, ஜி-20 அமைப்பில், அர்ஜென்டினா, அவுஸ்ரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாபிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட, வளர்ச்சி அடைந்த நாடுகள், அங்கம் வகிக்கின்றன.