மலேசியாவில் இலங்கையர்கள் கைது

293 0

arrested2மலேசியாவில் அடையாள ஆவணங்கள் இல்லாது தங்கி இருந்த 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி மலேசியாவின் போர்ட் டிக்சன் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல்களின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது 800க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 13 இலங்கையர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் 20 முதல் 50 வயதுகளை உடையவர்கள்.

ஆடையாள ஆவணங்கள் இன்மை, வீசா காலம் நிறைவடைந்தமை மற்றும் போலியான ஆவணங்களை கொண்டிருந்தை போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மலேசியாவின் இப்போ நகரில் போதைப் பொருள் உற்பத்தி தொடர்பில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவின் போதைப் பொருள் விசாரணைத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் டட்டுக் கங் செஸ் சியாங் இதனைத் தெரிவித்துள்ளார்.

இப்போ பகுதியில் இயங்கிய போதைப் பொருள் உற்பத்திகூடம் ஒன்றில் நடத்திய சோதனையின் போது கைதான 11 வெளிநாட்டவர்களில், 3 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

அவர்களிடம் இருந்து 16.8 கிலோ ஷியாபு என்ற போதைப் பொருளும், 50 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்களை ஏழு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.