மட்டக்களப்பு வாழைச்சேனை விபத்தில் வர்த்தகர் ஒருவர் பலி

286 0

%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த கணிபா மபாஸ் வயது 30 என்பவரே உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில், வானில் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் பின்னால் சென்று மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் வானில் பயணம் செய்தவர்  படுகாயங்களுக்குள்ளன நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் வான் மற்றும் டிப்பர் வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் இட்டு துக்கம் அனுஸ்டிக்கப்படுவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.