கற்பிட்டி – கந்தகுழி பகுதியில் புகைக்கப்பட்டிருந்த நிலையில் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
26 கிலோ எடை கொண்ட இந்த போதைப் பொருள், புத்தளம் விசேட காவற்துறை குற்றவியல் பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த பகுதியில் இருந்த பிரதான சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.