முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் ஆளுமை அ.தி.மு.க.வில் இல்லை- தங்கதமிழ்செல்வன்

314 0

எத்தனை செயற்குழு, பொதுக்குழுவை கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் துணிச்சல், ஆளுமை அவர்களிடம் இல்லை என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆண்டிப்பட்டியில் தி.மு.க.கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எத்தனை செயற்குழு, பொதுக்குழுவை கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வால் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க முடியாது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் துணிச்சல், ஆளுமை அவர்களிடம் இல்லை. தி.மு.க. கூட்டணியில் மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அனைவருக்கும் தெரியும். அவரை முன்னிலைபடுத்தி தான் நாங்கள் பிரசாரம் செய்வோம். அவர்தான் அடுத்த தமிழக முதலமைச்சராக வருவார். இந்த துணிச்சல் ஊழல் ஆட்சி புரிகின்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.