20 ஆவது திருத்ததை தோற்கடிக்க சந்திரிகா தயார்

305 0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்க 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைத் தோற்கடிக்கத் தயாராகி வரு வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்ட சந்திரிகா குமரதுங்க செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில்,தனது நட்பு அரசியல்வாதிகளிடம் தொலை பேசி மூலமும் நேரடி சந்திப்பின் மூலமும் 20 ஆவது திருத் தத்தின் பாதகமான நிலைமைகளைச் சுட்டிக் காட்டி வரு வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திருத்தத்திற்கு எதிராக குமரதுங்க விரைவில் மே டை ஏறுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின் றன.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மிகவும் ஆபத்தா னது என்றும் இது தொடர்பாக விரைவில் ஒரு நீண்ட அறிக் கை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.