இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை வலுப்படுத்துவதற்கானநிதியை பெறுவதது என்றால் 13 வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்திய பிரதமரிடமிருந்து அழுத்தங்கள் வெளியாகின என தெரிவிக்கப்படுவதை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நிராகரித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான 15 மில்லியன் அமெரிக்க டொலர்நிதி உதவி 13 வது திருத்தத்துடன் தொடர்புபட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில்13 பிளஸ் குறித்து பேச்சுக்கள் காணப்பட்டன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பரந்துபட்ட கருத்துப்பரிமாற்றங்களின் பின்னர் கருத்துடன்பாட்டின் அடிப்படையில் 13வது திருத்தம் குறித்து முடிவெடுக்கப்படும் தனியொருவரின் கருத்தினை அடிப்படையாக வைத்து முடிவெடுக்கப்போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.