அச்சுவேலியில் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு படையினர் அச்சுறுத்தல்

283 0

வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளரை பின்தொடர்ந்த இராணுவத்தினர் வீடியோ எடுத்துள்ளதுடன் கைதுசெய்வோம் என அச்சுறுத்தியுள்ளனர்.

தமிழ்கட்சிகளின் அழைப்பினை ஏற்று வடக்குகிழக்கில்முழுகதவடைப்பு இடம்பெற்றுவரும் நிலையில் அச்சுவேலி பகுதியில் படையினரும் புலனாய்வாளர்களும் கடைகளை திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர்.


இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த வலிகிழக்கு  தவிசாளர் தியாகராஜா நிரோசினை அச்சுறுத்தும் வகையில் படையினர் செயற்பட்டுள்ளனர்.

நானும் உபதவிசாளரும் அப்பகுதியில் கடை உரிமையாளர்களிடம் பேசியபோது அவர்கள் தங்கள் கடைகளை திறக்குமாறு படையினரும் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் அச்சுறுத்தினர் என தெரிவித்தனர் என நிரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் பஜிரோ ரகவாகனத்தில் வந்த இராணுவஉயர் அதிகாரிகள் என்னுடைய வாகனத்துக்கு முன்பாகவும்பின்பாகவும் இடையூறு விளைவித்து அச்சுவேலி மத்திய கல்லூரி முன்பாக வீடியோ எடுத்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

உங்களை கைதுசெய்வோம்என பொலிஸார் தெரிவித்தனர் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
இது என்னை அச்சுறுத்துகின்ற விடயம் எனஅவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அச்சுவேலிபகுதியில்பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.