கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர்களுக்காக உலகமெங்கிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
பிரேசில் நாட்டின் செப்பகொயென்ஸ் ரியல் கழகத்தின் வீரர்கள் பயணித்த விமானம் கொலம்பியாவில் விபத்துக்குள்ளானது.
இதில் 76 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் முன்னாள் பிரபல வீரர்களான பேலே மற்றும் மரடோனா ஆகியோருடன், லியோனால் மெசி உள்ளிட்ட முன்னிலை காற்பந்து வீரர்களும், உயிரிழந்த காற்பந்தாட்டக் காரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பிரேசிலில் உள்ள செப்பகோ கழக விளையாட்டறங்கில் நேற்று விசேட அஞ்சலி கூட்டமும் இடம்பெற்றிருந்தது.