திலீபன் அவர்களது 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 27.9.2020 பிறேமகாவன் நகரில் நடைபெற்றது.

1381 0

திலீபன் அவர்களது 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாக இன்று 27.9.2020 ஞாயிற்றுக்கிழமை பிறேமகாவன் நகரில் நடைபெற்றது. பிற்பகல் இரண்டுமணிக்கு சுடரேற்றி ஆரம்பமாகிய வணக்கநிகழ்வில் கவிவணக்கம் இளையமாணவர்களது உரைகள் போன்ற நிகழ்வுகளோடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநில பொறுப்பாளரது எழுச்சி உரையோடு நம்புங்கள் தமிழீழம் பாடல் நிறைவாக ஒலிபரப்பப்பட்டது. மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த லெப். கேணல் திலீபன் அவர்களது உருவச்சிலை வருகை தந்திருந்த அனைவரையும் கலங்க வைத்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.