ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலைகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் 20 பிரான்சு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ருவாண்டாவின் பிரதம விசாரணையாளர் ரிட்சட் முஹுமுசா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை தொடர்பில் பிரான்ஸ் அதிகாரிகளின் உயரிய ஒத்துழைப்பு அவசியப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த படுகொலைகளை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
ருவாண்டா இனப்படுகொலையின் போது சுமார் 8 லட்சம் பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.