மேல் மாகாணத்தில் சந்தேகத்தின் பேரில் 1,481 பேர் கைது

288 0

மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1,481 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 47 பேரும் உள்ளளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுப்பட்டு கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்து வந்த 70 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரை தீர்க்கப்படாத 80 குற்றங்களும் தீர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் ஊழல் குற்றச்சாட்டில் 777 சந்தேக நபர்களும், நீதிமன்றத்தை புறக்கணித்த 326 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.