நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(காணொளி)

354 0

upநாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளமையினால், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களே இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்; மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று காலை வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்காதமையினால் அங்கு சிகிச்சைக்கு சென்ற பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தினால் மருத்துவ சேவைக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டித்து, வைத்தியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது