இந்தியாவில் தாக்குதல்

393 0

daily_news_1548229455948இந்தியாவின் – ஜம்மு-காஷ்மீரில் உள்ள இராணுவத் தளம் ஒன்றின் மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் இரண்டு இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர்.

4 பேருக்கும் அதிகமான ஆயுததாரிகள் இராணுவத் தளத்துக்குள் பிரவேசித்து தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் சிலர் அங்கேயே பதுங்கி இருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில் தேடல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

குறித்த இராணுவத் தளத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் குடும்பத்துடன் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் யூரியில் உள்ள இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.