வடக்கில் சூறாவளி வீசக்கூடிய அபாயம்

313 0

%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bfவடக்கில் அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி வீசக்கூடிய அபாயம் உள்ளதாக யாழ் மாவட்டசெயலக அனர்த்த முகாமைத்துவ அலகினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதனால்,இத்தாழமுக்கம் யாழ் குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதேவேளை அடுத்து வரும் 12மணித்தியாலங்களில் இத்தாழமுக்கமானது சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவு இத்தாழமுக்கமானது தமிழ் நாட்டின்வடபகுதியூடாக நகருமெனவும், 2ஆம் திகதி வரை காற்றுடன் கூடிய மழை காணப்படுமெனவும்வானிலை அவதானிப்பு நிலையத்தினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதென, யாழ் மாவட்டஅனர்த்த முகாமைத்துவ அலகினால் அறிவிக்கப்பட்டுள்ளது.