மாவீரர் நாளை அனுஸ்ட்டித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது நீதி மற்றும் சட்ட ஒழுங்குகள் துறை சார்ந்த அமைச்சுகளே, காவற்துறையினருமே என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 27ஆம் திகதி போரினால் உயிரிழந்த தங்களின் உறவினர்களை நினைவுக் கூறும் செயற்பாடுகளில் வடக்கு கிழக்கில் பொது மக்கள் ஈடுபட்டனர்.
ஆனால் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் நினைவுகூறப்படுவது சட்ட விரோதமானது.
எனினும் இது இராணுவத்துடன் தொடர்பு பட்டதில்லை.
இது தொடர்பில் காவற்துறையினரும், சட்டத்துறை அமைச்சுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பில் அவதானமாக இருப்பதாகவும், இது தேசிய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விடயமாதலால், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.