மன்னார் – பேசாலை – பெரிய கரிசல் பகுதியில் சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள சுமார் ஆயிரத்து 24 கிலோ 245 கிராம் மஞ்சள் மூட்டைகள் பொலி ஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பேசாலை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேகத்திற் கிடமான லொறியை பரிசோதனை செய்த போது மஞ்சள் மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த லொறியிலிருந்து 29 மஞ்சள் மூடை களைப் பறிமுதல் செய்ததாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.