குடும்ப நிகழ்வில் கலந்துகொண்ட ஈழத்தமிழர்கள் 94 பேருக்கு கொரோனா, ஜேர்மனியில் சம்பவம்

903 0

ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld என்ற நகரில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற பூம்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழர்கள் 94 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது அந்நாட்டு சுகாதாரப் பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற. செய்தியை அங்கிருக்கும் மக்கள் அறியத்தந்துள்ளார்கள்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உடனடியாக உட்படுத்துமாறு சுகாதாரப் பிரிவு அந்நகர வானோலிகள் அறிவித்துக்கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.