தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் புதிய தேசிய அமைப்பாளர் .

351 0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்   புதிய தேசிய அமைப்பாளராக  தென் தமிழீழம் , மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

இது தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

முன்னதாக தேசிய அமைப்பாளராக இருந்த விஸ்வலிங்கம் மணிவண்ணன் கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை மீறியதாக கூறிஅவர் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக  தெரிவித்தார்.​

மேலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்   உப செயலாளராக தென்  தமிழீழம் , திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் இரா.சிறீஞானேஸ்வரன்( கண்ணன்)அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார் .