மீனவர் கைது குறித்து மோடியின் கவனத்திற்கு கொண்டுச் சென்றார் ஜெயா

4682 23

jeyaஇலங்கை கடற்பரப்பில் நேற்று ஐந்து தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா, மோடியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற இந்த ஐந்து பேரும் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தநிலையில் இந்தப்பிரச்சினைக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வுக் காணப்படவேண்டும் என்று ஜெயலலிதா, மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment