பெல்ஜிய இளவரசர் விதிகளை மீறி இலங்கை பிரதமரை சந்தித்ததாக குற்றச்சாட்டு

292 0

8177655d6bf3e4609d44c724c011931a_xlபெல்ஜியத்தின் நெறிமுறைகளை மீறி அந்த நாட்டின் இளவரசர் லோரன்ட், இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் பிரதமர் ரணில்விக்ரமசிங்க பெல்ஜியத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது இந்த சந்திப்பு நடைபெற்றது.

எனினும் இந்த சந்திப்பு தொடர்பில் பெல்ஜியத்தின் இளவரசரால் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை.

இது அந்த நாட்டின் வெளியுறவுக்கொள்கைகளுக்கு புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.