யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் .கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு.

851 0

யேர்மனி நொய்ஸ் நகரில் 26.9.2020 சனிக்கிழமை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அப்பகுதியில் உள்ள தமிழ்மக்கள் கொரோனா நோயின் அகோரத்தாக்குதலுக்கு முகம் கொடுத்தபடி, யேர்மனிய அரசு அறிவித்திருக்கும் கொரோனா சட்ட விதிமுறைகளைப் பேணியபடி தங்களுக்காக போராடி உயிர் நீத்த தளபதிகளுக்கு மலர் தூவி சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

இந் நிகழ்வில் பொதுச்சுடரினை ஓமந்தையில் சிறிலங்கா இராணுவத்தினருடரான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் நல்லதம்பி அவர்களின் சகோதரி திருமதி. சிவராசா அவர்கள் ஏற்றிவைத்தார்கள்

தமிழீழத் தேசியக் கொடியினை யேர்மனி தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து லெப்.கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை திருமதி ரவிச்சந்திரன் பிரதீபா அவர்கள் ஏற்றிவைத்தார்கள். கேணல் சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நகரப் பொறுப்பாளர் திரு.யோகேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நொய்ஸ் நகரச் செயற்பாட்டாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் மலர்மாலை அணிவித்தார்.கேணல் சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலையினை செல்வன் அருண் பரமதாஸ் அவர்கள் அணிவித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து பல கலை நிகழ்வுகளுடன் தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவுப் பகிர்வு இடம்பெற்றது.
இறுதியாக தமிழீழத் தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப்பாடலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.