பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராக இணைய வழியில் ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மாநாடு ஒன்று ஐக்கிய நாடுகளின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று நடைபெற்றது.
இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, ஐக்கிய நாடுகளின் பால்நிலை குழுமத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய நாடுகுளின் பால்நிலை குழுமத்தின் தலைவர் அலைன் சிபெனாலெர், சமுக வளைதங்கள் மற்றும் எண்மான ஊடகங்களின் ஊடாக பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் இதனை தடுப்பதற்கான வழிமுறைகளை அமுலாக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் சிறார்கள் அச்சமற்று பாதுகாப்பாக செயற்படக்கூடிய சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.