யாழ் வலிகாமத்தில் விடுவிக்கப்படாத கடற்கரையை அண்மித்த காணிகள்-மக்கள் விசனம்

298 0

%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%bfவலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து சில பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கடற்கரையை அண்மித்த பகுதிகள் எவையும் விடுவிக்கப்படாத நிலையுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த அரசாங்கத்தினால் சுமார் 2000 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில் சுமார் 500 இற்கும் அதிகளவிலான ஏக்கர் நிலப்பரப்பு இராணுவம் பொலிஸ் மற்றும் கடற்படையினரின் வசமே தற்போதும் இருப்பதாக மீள்குடியேற்றக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு கடற்கரைப் பிரதேசத்தையும் விடுவிக்கப்பட்ட ஏனைய பிரதேசத்தின் ஏல்லைகளையும் மீண்டும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவமும் கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மக்களின் குடியிருப்புகளில் இருந்த விடயங்களையும் மரங்களையும் அழித்தும் அதனைக் களவாடியும் தையிட்டி பகுதி  கரையோர படைத்தளங்களை விஸ்தரிக்கின்ற தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.