யாழில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி குற்றங்களை கட்டுப்படுத்தி, பொது மக்களுக்கு சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ன, யாழ்.மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெலஸ்ரின்லாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான கௌரவிப்பினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.