திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்தி அவமதித்துள்ளனர். நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், பெரியார் சிலையை அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு கடும் கண்டனங்களை கூறிக்கொள்கிறேன். பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.