கருணாவுக்கு சிறையில் தனி அறை

306 0

484766_127301554142199_46764961_nவாகன முறைக்கேடு குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் தனியான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

அவர் விளக்கமறியல் சிறையின் எம்2 கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி என்ற அடிப்படையில் அவரின் உயிருக்கு ஆபத்து என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உணவுகளை வெளியில் இருந்து எடுத்துவர கோரிக்கை விடுக்கப்படுமானால் அது தொடர்பில் ஆராயப்படும் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.