தாய்லாந்தில் சோகம் – லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலி

251 0

தாய்லாந்து நாட்டில் லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ளது நக்கோன் ராட்சாசிமா மாகாணம். இங்குள்ள நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த பேருந்து எதிர்த் திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்