டொப் – 10 என்ற பெயரில் தற்போதைய அரசின் அமைச்சர்களுக்கு எதிராக போலியானமுறைப்பாட்டைச் செய்த மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, அவரை சிறையில் அடைக்கவேண்டும் என்று பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு மீதானவரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போதே அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு எதிராக சாட்சியமற்ற முறைப்பாட்டை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் மஹிந்தானந்த அளுத்கமகே கையளித்திருந்தார்.
இந்த முறைப்பாடு குற்றச்சாட்டு ஆவணம் மட்டுமேயாகும்.
இந்த முறைப்பாட்டில் சாட்சியங்களுடனான எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படவில்லை.
நாட்டில் நலனுக்காக செயற்படும் அமைச்சர்கள் மீது வீண் பழி சுமத்தி மக்களை திசைதிருப்பும் நோக்கிலேயே ‘டொப் 10’ முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குப் பதிவாகியுள்ள அமச்சர் ஒருவர் இவ்வாறான முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளமை வியப்புக்குரியதாகும்.
ஊழல், மோசடி தொடர்பில் இவர் மீது பல முறைப்பாடுகள் உள்ளன எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.