புதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து

250 0

கருஜெயசூரிய, புதிய கட்சியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் ஊடகங்கள் பலவற்றில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் குறித்த தகவலை முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய மறுத்துள்ளதாக அவரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கருஜெயசூரியவின் செயலாளர் கூறியுள்ளதாவது, “முன்னாள் சபாநாயகரோ அல்லது அவரின் சமூகநீதிக்கான இயக்கமோ புதிய கட்சி எதனையும் ஆரம்பிப்பது குறித்து சிந்திக்கவில்லை.

சமூக நீதிக்கான இயக்கத்துக்கு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணமில்லை. மேலும் அது தனது நோக்கத்திலிருந்து ஒருபோதும் தடம்புரளாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.