இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் விலைமாதுகள்

290 0

1465457775-2083இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என அரச சார்பற்ற நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது என மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீயாணி விஜேவிக்கிரம நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

‘பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் தேர்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், இரண்டு வருடமாகியும் இன்னும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.